எங்கள் சமூகத்துக்கு ஏது சுதந்திரம்? சொந்த மண்ணைவிட்டு போக சொன்னால் எங்கு போவது? ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 6:54 pm

எங்கள் சமூகத்துக்கு ஏது சுதந்திரம்? சொந்த மண்ணைவிட்டு போக சொன்னால் எங்கு போவது? ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் வேதனை!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவில் அருந்ததியினர் காலனி மக்கள் நேற்று இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராட்டம் நடத்தினர்..

பின்னர் சாலை மறியலாக மாறியது. அதனால் போலீசாருக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மினி பேருந்து உடைக்கப்பட்டது ஒரு இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

போலீசார் இந்த மோதலில் தடியடி நடத்தினர். அதனைத் தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதன் பின்பு இரவில் பிரச்சனைக்குரிய ஒன்பது பேரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் விடுவித்தனர். இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 140 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அருந்ததியினர் காலனியில் உள்ள மக்களை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவின் மாநில தலைவர் ரஞ்சன் குமார் சந்தித்து தனது ஆதரவையும் ஆறுதலையும் கூறினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எஸ்சி.எஸ்டி.மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் கூறுகையில் நேற்று நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. அருந்ததியின மக்களின் கோரிக்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சச்சரவில் முடிந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை உயர் அதிகாரிகளிடம் பேசி காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர்கள் வைத்து வழக்கை எதிர் கொள்வோம். மேலும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தையும் நீதியையும் பெற்றுத் தர தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைப்போம்.

அதேபோன்று மதுரை நீதிமன்றத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தொடரப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் வைத்து நீதிமன்றத்தில் முறையாக வாதாடுவோம் என தெரிவித்தார்.


மேலும் அங்கு கூடியிருந்த அருந்ததியின பெண் கூறுகையில்” சொந்த மண்ணை விட்டு போக சொன்னால் எப்படி? சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொல்கிறார்கள் எங்கள் இனத்திற்கு ஏது சுதந்திரம் என கண்ணீருடன் தெரிவித்தார்.

சினிமாவில் எங்களை வைத்து படம் ஜெய்பீம் என எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எங்களுக்கு ஏது விடிவுகாலம் என வேதனையுடன் பேசினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!