கண்ட கண்ட ந**** எல்லாம் அண்ணாவை பத்தி தப்பா பேசுது… சீமான், அண்ணாமலையை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2023, 8:46 am

கண்ட கண்ட ந**** எல்லாம் அண்ணாவை பத்தி தப்பா பேசுது… சீமான், அண்ணாமலையை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்!!!

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாக சொல்லப்படும் இடம்பெற்றுள்ளதாவது: டே.. வெட்கமா இருக்கு எங்களுக்கே..கண்ட நாயெல்லாம் அண்ணாவை பற்றி பேசுறான் இந்த நாட்டில்..

இந்த சீமான்னு ஒருத்தன் அண்ணாவை பற்றி பேசுறான்.. பெரியாரை பற்றி பேசுறான்.. இந்த மாவட்டத்தில் நீ பேசிட்டு வெளியேறி போயிடுவியாடா? சொல்லு பார்க்கலாம். அவமானமா இருக்கு நமக்கு. பெரியார் தியாகத்துக்கு இவனெல்லாம் ஒரு… சமமானவனா?

அண்ணாமலைன்னு ஒரு…. பய அண்ணாவை பற்றி பேசுறான்.. பெரியாரைப் பற்றி பேசுறான்.. இதெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கானுங்க இந்த நாட்டுல.

நான் ஏற்கனவே ஒரு கூட்டத்துல சொன்னேன்.. ஆட்சி எல்லாம் நமக்கு முக்கியமல்ல.. தன்மானம்தான் முக்கியம். என்றைக்கும் உங்களுக்காக உழைக்கக் கூடிய இயக்கம் திமுகதான்.

இன்னைக்கு யோக்கியன் மாதிரி பேசுறான் பிஜேபிகாரன். ஊருக்கு ரெண்டு பேரு கூட இல்லை. ஒருத்தன் இருக்கானா? இன்னைக்கு மோடி வந்துட்டார்.. மோடி வந்துட்டார்னு மோடி வித்தை காட்டுறானுக.. டேய்.. உங்க மோடி வித்தை எல்லாம் இங்க எடுபடாது ஞாபகம் வெச்சுக்க.

நீ என்னா கத்து கத்தினாலும் சரி அதிமுககாரனுடன் கூட்டணியே வெச்சிக்கினாலும் சரி 2024 தேர்தலில் உங்களை நாங்க பார்க்கிறோம்.. வா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, 3 வருஷத்துக்கு முன்னாடி பிஜேபிகாரன் ஊரில் இருந்தானா? இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரன் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்து பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அமைச்சர் தா.மோ.அன்பரசின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாராயணன் திருப்பதி, ‘புறம்போக்குகளே, களவாணிப்பயல்களே, வெட்கம் கெட்டவர்களே’, எங்கள் தலைவர் அண்ணாமலையை தரக்குறைவாக பேசாதீர்” என பதிலடி கொடுத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 459

    0

    0