அண்ணாமலையை மாற்ற சொன்னோமா? அதிமுகவுக்கு எந்த அழுத்தமும் இல்லை : இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2023, 12:51 pm

அண்ணாமலையை மாற்ற சொன்னோமா? அதிமுகவுக்கு எந்த அழுத்தமும் இல்லை : இபிஎஸ் பரபரப்பு பேச்சு!!

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயாலளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன். 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க கூட்டணி முறிவு என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணி புதுவையுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெல்வோம். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியுற்றது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் 550 வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் இந்த இரண்டரை ஆண்டுகளில் 2 சதவீத வாக்குகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலினோ கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீத வாக்குகளை நிறைவேற்றிவிட்டதாக சொல்கிறார்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகியதில் எந்த மாற்றமும் இல்லை.
அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என பாஜக மாநில துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி கூறியது அவருடைய சொந்த கருத்து.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த கட்சியெல்லாம் இருக்கும் என கேட்கிறீர்கள். இதற்கு எனது பதில் பொறுத்திருந்து பாருங்கள். அமித்ஷாவோ நட்டாவோ மோடியோ அதிமுகவுக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை.

பாஜகவினர் அதிமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து யாரும் பேசவில்லை. தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் அதிமுகவினர் மனதை புண்படுத்திவிட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற அதிமுக கோரியதாக கூறுவது தவறு என்றார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?