விசிக கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு : சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2023, 1:56 pm

விசிக கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு : சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!!

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் நடப்பட்டது.

இதையடுத்து அனுமதியின்றி நடப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி கம்பத்தை அகற்ற வேண்டும்என வலியுறுத்தி அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

ஆனால் இது நாள் வரை கொடிகம்பம் அகற்றா ததால் ஆத்திரமடைந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை சாலையில் ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை அகற்றினால் மட்டுமே சாலை மறியல் கைவிடப்படும் எனக் கூறினர்.

சாலை மறியல் தொடர்ந்து நடைபெறுவதால் சாலையின் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ