4 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2023, 9:42 pm

4 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சியில் அதிகப்படியான தெருநாய்கள் இருப்பதை கட்டுப்படுத்த பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், சூளகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜ் நகரில் குழந்தையை 4 தெருநாய்கள் விரட்டி கடிக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது..

ஆசிப் இக்பால் என்பவரது 4வயது குழந்தை முஸ்தகிம் நாய் கடித்ததில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நடந்து செல்வோர், மாணவர்கள், குழந்தைகள் என பலரையும் அச்சுறுத்தி கடிக்கும் தெருநாய்களை மற்றும் கட்டுப்படுத்த சூளகிரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://vimeo.com/871521230?share=copy

இந்த நிலையில் அந்த குழந்தையை தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்