ரூ.300 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் முதலமைச்சருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு ; தீவிரம் காட்டும் சிஐடி போலீசார்…!!

Author: Babu Lakshmanan
6 October 2023, 9:04 am

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, அவருக்கான காவலை அக்டோபர் 19ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு மற்றும் அவரைக் காவலில் வைக்கக் கோரிய ஆந்திர மாநில சிஐடி போலீசார் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேலும், சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீசார் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளனர்.

  • Actor Sri Caught By Families இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!