மதுவால் சீரழிந்த குடும்பம்… வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம் ; மனைவியை போட்டு அடித்த கணவன் ; கொலையாளியான மகன்…!!!

Author: Babu Lakshmanan
6 October 2023, 12:48 pm

ராணிப்பேட்டை ; மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததை தட்டிகேட்ட தாயை அடித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்வேலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (50). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், யுவராஜ் (26) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோபி முறையாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு, வீட்டில் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

எனவே, வேலைக்கு செல்லுமாறு மஞ்சுளா கூறியதில், ஆத்திரமடைந்த கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் வீட்டிலிருந்த பொருட்களை உடைத்ததோடு, மகன் யுவராஜின் கண்முன்னே மஞ்சுளாவை கடுமையாக கோபி தாக்கியுள்ளார்.

தாயை அடிப்பதை கண்ட ஆத்திரத்தில் மகன் யுவராஜ் திடீரென தந்தை கோபியை தடுக்க முயன்றதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து கோபியின் தலையில் போட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார், தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் யுவராஜை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 619

    0

    0