வனிதா பொண்ணுன்னா சும்மாவா?.. நான் பேசிட்டு இருக்கேன்.. விசித்ராவை வெளுத்து விட்ட ஜோவிகா..!(வீடியோ)

Author: Vignesh
6 October 2023, 1:05 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg boss 7

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இதனிடையே, தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் ஜோதிகாவின் கல்வி குறித்து தான் ஏதும் கூறவில்லை என்றும், அடிப்படைக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அவசியம் என்று விசித்ரா தெரிவிக்கிறார். அதற்கு ஜோவிகா எல்லோரும் படித்து பெரிய ஆளாக வேண்டிய வேண்டியதில்லை என கூறுகிறார். இந்த பரபரப்பான பிரமோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

உங்க அம்மா சொன்னா கேட்டுக்க மாட்டியா’ என விசித்ரா சொல்ல, ‘ ஷோவுக்கு வந்தது நான் தான், என் அம்மாவோ, தாத்தாவோ இல்லை.. என்னை பத்தி மட்டும் நீ பேசு.. என் background பத்தி நீ பேசாத’ என கத்தி இருக்கிறார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…