திமுக – பாஜக போட்டியா? உதாரணமாக வந்த ரஜினி… அண்ணாமலையை சாடிய பிரபலம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 October 2023, 9:49 pm

திமுக – பாஜக போட்டியா? உதாரணமாக வந்த ரஜினி… அண்ணாமலையை சாடிய பிரபலம்!!!

தமிழக பாஜகவின் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்தான் “மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் போட்டி” என அண்ணாமலை கூறியிருந்தார்.

இதற்கு திமுக நிர்வாகிகள் பலர் விமர்சனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் போஸ் வெங்கெட் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதாவது, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து நான்தான் இனிமேல் உங்களுக்கு போட்டி என்று( போஸ் வெங்கட் ) சொன்னால் எவ்வளவு காமெடியாக இருக்குமோ அவ்வளவு காமெடி அண்ணாமலை சொன்ன தி.மு.க விற்கு போட்டி பா.ஜ.க என்பது” என்று எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது தற்போது ஸ்கிரீன் ஷாட்களாக பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?