மாடுகளுக்கு தொக்கம் இருக்கு… மடியில் கவரை கட்டி கால்நடை விவசாயிகளிடம் கல்லா கட்டிய போலி வைத்தியர் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
7 October 2023, 8:36 am

கால்நடைகளுக்கு மருத்துவம் என்று கூறி கிராமப்புற வாசிகளிடம் பணத்தை தட்டிப் பறிக்கும் போலி வைத்தியரை கையும் களவுமாக பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கால்நடை மற்றும் விலங்குகளுக்காக ஏகப்பட்ட திட்டங்கள் மற்றும் கால்நடை மருத்துவத்திற்காக கோடிக்கணக்கில் திட்டங்கள் இருந்து வருகிறது. அப்படி இருந்தும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா போடிகாமன்வாடி கிராமத்து பகுதியில் கால்நடை மற்றும் விலங்குகளுக்கு காலங்காலமாக தொக்கம் எடுப்பதாக கூறி, போடிகாமன்வாடி பகுதியை சேர்ந்த முத்தையா மகன் குமார் என்பவர் கால்நடை விவசாயிகளை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன் இடுப்பில் பாலிதீன் பைகளை வைத்துக்கொண்டு, கால்நடைகளின் வயிற்றில் இருந்து எடுத்ததாக கூறி, ஒரு மாட்டிற்கு 300 விகிதம், கிராமவாசிகளிடம் வாங்கி லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக போடி காமன்வாடி பகுதி கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆகவே சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த தொக்கம் இருப்பதாக கூறி ஏமாற்றிய போலி வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற திருட்டுத்தனமான நடைமுறை மாறும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.

https://player.vimeo.com/video/872036442?badge=0&autopause=0&quality_selector=1&progress_bar=1&player_id=0&app_id=58479

தற்போது மக்களிடம் வசமாக சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 418

    0

    0