உங்க வயிறு மட்டும் நிறைஞ்சா போதுமா? லியோ படத்தில் டான்ஸ் ஆடியவர்களுக்கு சம்பளம் எங்கே? படம் ரிலீஸ் ஆகுமா?

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 2:54 pm

உங்க வயிறு மட்டும் நிறைஞ்சா போதுமா? லியோ படத்தில் டான்ஸ் ஆடியவர்களுக்கு சம்பளம் எங்கே? படம் ரிலீஸ் ஆகுமா?

அரசியலில் விஜய் வராரோ என்னவோ, ஆனா அவரு படத்துக்கு சுத்தி சுத்தி பிரச்சனை வருவது வாடிக்கையாவே மாறிடுச்சு.

ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல பிரச்சனைகளை சந்தித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார். துப்பாக்கி முதல் சமீபத்தில் வெளியான வாரிசு வரை சந்திக்காத பிரச்சனையே இல்லை.

தற்போது லியோ படத்துக்கு புதிய பிரச்சனை வந்துள்ளது. ஏற்கனவே ஆடியே லாஞ்ச் ரத்தாகியிருந்தது. இதற்கு அரசியல் காரணம் கூறப்பட்டும் வருகிறது.

5ம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் விஜய் ஆபாச வார்த்தை பேசியதற்கு ஒரு கூட்டம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. லியோ படத்திற்காக விஜய் ரூ.125 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் நான் ரெடிதான் வரவர பாடலுக்காக நடனம் ஆடிய 1300 நடன கலைஞர்களுக்கு இன்னும் சம்பளம் போகவில்லை என்ற குற்றச்சாட்டு தயாரிப்பாளர் மீது வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நான் ரெடிதான் பாடலில் பின்னால் ஆடிய நடனக் கலைஞர்களின் ஒருவரான ரியாஷ் முகமது அளித்துள்ள பேட்டியில், 1300 கலைஞர்கள் ஆடிய அந்த பாடலில் நானும் ஒருவன், காலை 6 மணிக்கு வர சொன்னார்கள், 20 ஆயிரம் ரூபாய் சொன்னார்கள் 8 நாட்கள் ஷூட் எடுக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால் 6 நாட்களில் ஷூட்டிங் முடிந்து விட்டது.

16 ஆயிரம் ரூபாய் வரவேண்டும் ஆனால் 4 மாதங்களாக வரவே இல்லை.. அப்ப வரும், இப்ப வரும் என காத்திருந்தோம் ஆனால் 1300 பேர் இப்போது சம்பளம் வராமல் தவித்து வருகிறோம். எந்த ரெஸ்பான்சும் கிடைக்கல.

இதில் லியோ படக்குழு தலையிட்டு எங்களுக்கு உதவி செய்தால் நல்லது என்றும், படம் ரிலீசுக்கு முன் சம்பளம் கொடுத்தால் நல்லது, அக்கவுண்டில் பணம் அனுப்புவோம் என கூறியுள்ளனர். ஆனால் இது வரை பணம் வரவில்லை. யாரையும் எங்களை தூண்டவில்லை, என்னிடம் ஆதாரம் உள்ளது, 1300 பேருக்கும் ஆதாரம் உள்ளது, ஒருவருக்கு 16 ஆயிரம் ரூபாய் என 1300 பேருக்கு சம்பளம் பாக்கி கொடுக்க வேண்டியுள்ளது.

ஒரு வேளை சம்பளம் கொடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக புகார் மனு கொடுக்க உள்ளதாக ரியாஷ் அகமது உள்ளிட்ட நடனக் கலைஞர்கள் கூறியுள்ளதால் படம் ரிலீஸ் ஆகுமா என்பது புரியாத புதிராகவே உள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 409

    0

    0