அம்மா சாவுக்கு Lipstick போட்டு போனேன்… வனிதா சொன்ன காரணத்தை கேட்டு காரித் துப்பும் நெட்டிசன்ஸ்!
Author: Shree7 October 2023, 4:02 pm
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.
அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் மேக்கப் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது லிப்ஸ்டிக் பார்த்ததும் என் அம்மா நியாபகம் தான் வரும். ஏனென்றால் அவங்க எப்பவுமே லிஸ்டிக் போட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். ” எது இருக்கோ இல்லையோ ஒரு பொம்பளைக்கு லிப்ஸ்டிக் இருக்கனும்னு சொல்லுவாங்க. நான் லிஸ்டிக் போடமாட்டேன்னு என்னை திட்டிட்டே இருப்பாங்க.
எங்க அம்மா செத்த அப்போ அவங்க சாவுக்கு நான் நல்லா மேக்கப் பண்ணிட்டு டார்க் பிங்க் கலர் குர்தா போட்டுக்கொண்டு லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு தான் போனேன். யாரு வேணா என்ன வேணா நெனச்சிக்கட்டும் எங்க அம்மாவுக்கு இது பிடிக்கும் அதனால் நான் அவங்க சாவுக்கு அவங்களுக்கு பிடிச்ச மாதிரியே போனேன் என அந்த பேட்டியில் வனிதா பேசியுள்ளார். இதனை நெட்டிசன்ஸ் எல்லோரும் மோசமாக விமர்சித்து ட்ரோல் செய்துள்ளனர். ” செத்து போன அம்மா திரும்பி வரவா போறாங்க நீ உருட்டு மா” என்றெல்லாம் கலாய்த்து தள்ளியுள்ளனர். இதோ அந்த வீடியோ: