வீட்டை விட்டு வெளியேறியது அனன்யா இல்லை… கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வச்சி அனுப்பிய கமல்!

Author: Shree
7 October 2023, 9:26 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு, பாவா செல்லதுரை, யுகேந்திரன் ஆகியோர் உள்ளனர். இதில் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து அனன்யா வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியது.

ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, வீட்டை விட்டு வெளியேறியது அனன்யா ராவ் இல்லையாம். ஆம், கடைசி நேரத்தில் செம ட்விஸ்ட் வச்சி நிகழ்ச்சியை வேற லெவலில் கொண்டு சென்றுள்ளாராம் கமல். ஆம், முதல் விக்ஷனில் வெளியேறியிருப்பது “யுகேந்திரன்” தானாம். இவர் தான் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார் என தகவல்கள் கூறுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2124

    46

    64