சமூகநீதி சமூகநீதினு பேசறீங்க.. அப்போ சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்க : முதலமைச்சரை சந்தித்த அன்புமணி வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2023, 12:59 pm

சமூகநீதி சமூகநீதினு பேசறீங்க.. அப்போ சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்க : முதலமைச்சரை சந்தித்த அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை தலைமைச் செயலகத்தில் எம்பி அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில் ;
எம்.பி.சி பிரிவினருக்கு 10. 5% இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை இந்த தீர்மானத்தை இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசினை வலியுறுத்துவதற்கு முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததாக கூறினார்.

15 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதாகவும் மதுவிற்பனை குடிசை பகுதி அதிக நிறைந்தது. வட மாவட்டங்கள் எனவும் அரசு விரைந்து ஒரு கொள்கை முடிவு எடுத்து 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தினை விரைந்து அமல்படுத்த வேண்டும் எனவும், சாதிவாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 1980 இல் இருந்து கோரிக்கை வைத்து வருவதாகவும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் 10 புள்ளி 5% இட ஒதுக்கீடுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் கூறினார்.

69% இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்கள் அத்தனை சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கின்றார்களா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதாகவும் ஒன்பதாவது அட்டவணையில் இந்த சட்டம் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர் அதற்காகவே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜாதிவாதி கணக்கெடுப்பு நடத்தி இருப்பதாகவும் நடத்தப்பட இருப்பதாகவும் ஆகையால் சமூக நீதிப் பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவும் சமூக நீதி பேசினால் மட்டும் போதாது, அதனை செயலில் காட்ட வேண்டும்.

மதுவிலக்கு போன்ற பிரச்சனைகள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் காவிரி விவகாரத்தில் வடமாவட்டங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை தமிழக முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கபினி கே ஆர் டி மேட்டூர் உள்ளிட்ட நான்கு அணைகளும் காவிரி மேலாண்மை கட்டுப்பாட்டில் வரவேண்டும் எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று காவிரி விவகாரத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 309

    0

    0