இது எங்க ஏரியா… அடம்பிடிக்கும் யானைகள் : சுற்றுலா பயணிகளுக்கு 8வது நாளாக தடை!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2023, 1:44 pm

இது எங்க ஏரியா… அடம்பிடிக்கும் யானைகள் : சுற்றுலா பயணிகளுக்கு 8வது நாளாக தடை!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனத்துறையின் சிறப்பு அனுமதி வாங்கி செல்லும் பகுதியாக பேரிஜம் ஏரி உள்ளது .

தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி யானைகள் நடமாட்டம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையானது தடை விதித்திருந்தது .

இந்த நிலையில் இன்றுடன் எட்டு நாள் ஆகியும் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை நீடித்து வருகிறது .

இதன் காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர் . மேலும் யானையை வனத்துறையினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .


தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோயர் சதுக்கம் பகுதியில் கடைகளை யானைகள் சேதப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 453

    0

    0