காது கொடுத்து கேட்டேன், ஆஹா குவா குவா சத்தம்.. பிக்பாஸ் ஆரவ்-க்கு குழந்தை பொறந்தாச்சு..!

Author: Vignesh
9 October 2023, 2:45 pm

பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான சைத்தான் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாகர்கோவிலை பூர்விமாக கொண்ட இவர் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் சிறு வேடத்தில் தோன்றியிருந்தார்.

Raahei aarav-updatenews360

இவருக்கு பெரிய கம்பேக் காக கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். அதன் பின்னர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதன் பின்னர் சினிமாவில் இவர் பெரிய ரவுண்ட் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வெளியான மார்கெட் ராஜா, மார்க்கெட்டில் வந்த வேகத்தில் வெளியேறியது. இருப்பினும் அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆரவ், தற்போது முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் தனது கெட்டப்பை மாற்றினார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை Raahei என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை Raahei இயக்குனர் கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா இமைப்போல காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று இந்த ஜோடிக்கு அழகி பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • VJ Sangeetha Instagram post love announcement புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 657

    0

    1