திடீரென வெளியேறிய பவா செல்லதுரை சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டதும் தூக்கி வாரி போட்டுடுச்சு!

Author: Shree
9 October 2023, 7:02 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இந்நிலையில் சென்ற வாரம் நாமினேஷனில் பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஐஷு, பாவா செல்லதுரை, யுகேந்திரன் ஆகியோர் இடம் பெற்றனர். இதில் அனன்யா ராவ் கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் விட்டைவிட்டு எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டார். அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 2 ஆயிரம் பேசப்பட்டு 7 நாட்களுக்கு மொத்தம் ரூ. 84 ஆயிரம் வாங்கிக்கொண்டு வெளியேறினார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் வீட்டிலிருந்த எழுத்தாளர் பவா செல்லதுரை தனக் , நெஞ்சு வலிக்கிறது என கூறி இதற்கு தன்னால் இந்த வீட்டில் இருக்கவே முடியாது என திடீரென வெளியேறினார். பவா செல்லதுரை அவர்கள் ஆரம்பத்தில் இருந்து தனக்கு கிடைத்த அனுபவங்களை போட்டியாளர்களிடம் பகிர்ந்த கதை ரசிகர்களிடையே ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்க ஒரு வாரத்திற்கு ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதன்படி ஒரே வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகி வாயடைக்க வைத்துள்ளது. அவ்வளவு தொகைக்கு அவர் தகுதியானவர் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…