இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் ; ஒருபுறம் இந்தியா கடும் எதிர்ப்பு… மறுபுறம் காங்கிரஸ் ஆதரவு…!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 7:18 pm

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாலஸ்தீனத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கூட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நில உரிமை மற்றும் மரியாதைக்காக போராடும் பாலஸ்தீனிய மக்களுக்கு எப்போது ஆதரவு அளிப்பதாகவும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும், இந்திய ஆரசு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த பதிவில், ‘இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் துணையாக நிற்கிறோம்,’ என தெரிவித்தார்.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 1091

    0

    0