திமுக கூட்டணி கட்சிகளை புரட்டி போடும் இபிஎஸ்… சட்டசபையில் இன்று அனல் பறக்க அதிமுக கையில் எடுத்த அஸ்திரம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2023, 9:17 am

திமுக கூட்டணி கட்சிகளை புரட்டி போடும் இபிஎஸ்… சட்டசபையில் இன்று அனல் பறக்க அதிமுக கையில் எடுத்த அஸ்திரம்!

சட்டசபையில் முதல் நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தில் கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் பெயர் கூட இல்லை என்று கூறி பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்த காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியான அதிமுக மற்று திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில் அதிமுகவினரும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே இன்று இரண்டாவது நாளாகத் தமிழக சட்டசபை கூடுகிறது. இதில் 2023 -2024 ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானியக் கோரிக்கை தாக்கல் செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவைப் பொறுத்தவரை நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான சிறப்பு மசோதாவைக் கொண்டு வர உள்ளனர்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் சிறுபான்மையினர் வாக்குகளை மீண்டும் தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக இறக்கியுள்ளதையே இது காட்டுகிறது. இது தவிரப் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது, திமுக நிறைவுற்றதாகத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர்.

அதேபோல மகளிர் உரிமை தொகை திட்டம் பலருக்கும் கிடைக்காதது குறித்தும் கேள்வி எழுப்ப உள்ளனர். இவை தவிர எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?