இளைஞர்களை வெளிய விடுங்க.. உள்ளாடைகளை அவிழ்த்து திருநங்கைகள் அட்டகாசம் : காவல் நிலையத்தில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan10 October 2023, 10:59 am
இளைஞர்களை வெளிய விடுங்க.. உள்ளாடைகளை அவிழ்த்து திருநங்கைகள் அட்டகாசம் : காவல் நிலையத்தில் பரபரப்பு!!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு புகார்கள் தொடர்ந்து நடந்து வந்த வண்ணம் உள்ளது.
அதன் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்கும் விதமாக தனிப்படை
அமைத்து கூடுவாஞ்சேரி போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம், காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார்
ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஊரப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும் படியான முறையில் மூன்று நபர்கள் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மகேஷ் (20), லிங்கேஸ்வரன்(21), சென்னை மாதவரம் பால் பண்ணை அருகில் வசித்து வரும் ஸ்டீபன் ராஜ் (22) என்பது தெரியவந்தது.
இவர்கள் சென்னையில் இருந்து இப்பகுதிக்கு வந்து சாலையில் தனியாக செல்லும், பெண்கள் மற்றும் தனி நபர்களை குறி வைத்து, பணம், நகை,
செல்போன் என தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதனடிப்படையில் அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
அந்த மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
மேலும், அந்த மூன்று நபர்களை விடுவிக்க கோரி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் திருநங்கை ஒருவர் தனது உள்ளாடைகளை அவிழ்த்து காவல் நிலைய வாசலில் தூக்கி விசி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தங்களது கைகளை தட்டி கத்தி கூச்சலிட்டதால் காவல் நிலைய வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.