பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு ரத்து… 9 நாட்களுக்கு நடைபெறாது என அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2023, 11:58 am

பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு ரத்து… 9 நாட்களுக்கு நடைபெறாது என நிர்வாகம் அறிவிப்பு!!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய விழாக்களில் ஒன்று நவராத்திரி விழா.

வரும் 15ஆம் தேதி நவராத்திரி விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவில் மலை மீது தினமும் நடைபெறக்கூடிய தங்கரத ஓட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், 24 ஆம் தேதி முதல் வழக்கம் போல தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நாள்தோறும் மலை மீது நடைபெறக்கூடிய தங்கரத புறப்பாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கரதம் இழுத்து முருகனை வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!