அஜித்தும் பண்ணிருக்காரு.. அதை பண்ணி தான் ஹிட் கொடுக்கணுமா.. கஸ்தூரி காட்டம்..!

Author: Vignesh
11 October 2023, 1:00 pm

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 49 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார்.

இருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படித்து வரும் நிலையில், கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார். மேலும், பிக் பாஸ் சீசன் செய்யல் போட்டியாளராக கலந்து கொண்டு ஒரு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி.

இதனிடையே, இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி லியோ படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பற்றி பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில், அவர் தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தை வருவது புதிதல்ல அஜித்தும் இத செஞ்சிருக்காரு.. ஆனா, விஜய் வாயிலிருந்து அந்த வார்த்தை வருவது சரியல்ல.. நீங்க விஜயை இப்படி சொல்ல வச்சது தப்பு கெட்ட வார்த்தை பேசி தான் ஹிட் கொடுக்கணுமா என்று நடிகை கஸ்தூரி தெரிவித்து இருக்கிறார்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 420

    0

    0