ஒரிஜினல் மாதிரியே.. ஆனால் எல்லாமே போலி : லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை.. பழனியில் ரவுண்டு கட்டிய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2023, 1:57 pm

ஒரிஜினல் மாதிரியே.. ஆனால் எல்லாமே போலி : லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை.. பழனியில் ரவுண்டு கட்டிய போலீசார்!!

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் பழனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பேருந்து நிலையம் பகுதியில சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் போலியாக லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் லாட்டரி சீட்டு விற்பனை செய்த அப்துல்கையும், சரவணன் , ஆகிய இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

பழனி பகுதியில் தொடர்ச்சியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

  • secret relationship with VJ's Priyanka பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!