நடிப்பை தாண்டி 5 சைடு பிசினஸ்…. பாலிவுட் கிங் காங்கிற்கு கோடிக்கணக்கில் கொட்டும் பணமழை!

Author: Shree
11 October 2023, 2:27 pm

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.

இவர் கௌரி கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஆர்யன் கான் , ஆபிராம் கான், சனா கான் என இரண்டு மகன் ஒரு மகள் இருக்கிறாள். ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ஷாருக்கான் நடிப்பையும் தாண்டி சைடு பிசினஸ் ஆக 5 தொழில் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறாராம்.

அது என்னென்ன என்று பார்க்கலாம்… 1. அம்பானி போன்ற பெரிய பெரிய பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் நடனமாட ரூ. 4 முதல் 8 கோடி சம்பளம் வாங்குகிறாராம். 2. குழந்தைகள் விளையாடும் தீம் பார்க் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். இதில் பெரிதாக லாபம் கிடைக்கவில்லை என்றாலும் மனதிருப்திக்காக இதை செய்து வருகிறார். 3. தி ராயல் ரியல் எஸ்டேட் என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்து மாதம் ரூ. 30 முதல் 40 கோடி வரை வருமானம் பார்க்கிறார். 4. கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் ஓனர் ஷாருக்கான் தான். அதற்கு பல பிராண்டுக்கு விளம்பரம் வருகிறது. அதில் ஒரு விளம்பரத்துக்கே ரூ. 15 கோடி வாங்குகிறார். 5. தன் மனைவியின் பெயரில் தயாரிப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் அண்மையில் வெளியான ஜவான் படம் ரூ. 720 கோடி வரை லாபம் ஈட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 498

    0

    0