இந்தி படிக்க சென்ற 17 வயது மாணவி… 50 வயது ஆசிரியர் செய்த காமலீலை.. இதுல 3 மாதம் வேற!!!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2023, 2:43 pm
இந்தி படிக்க சென்ற 17 வயது மாணவி… 50 வயது ஆசிரியர் செய்த காமலீலை.. இதுல 3 மாதம் வேற!!!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோண்டா மாவட்டத்தில் தேஹத் கோட்வாலி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள பஹ்ரை என்ற இடத்தில் வசித்து வருகிறார் 50 வயதான இந்தி ஆசிரியர்.
இவரிடம் 17வயது மாணவி ஹிந்தி படிக்க வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஆசைவார்த்தைகளை கூறி, மனதை கலைத்துள்ளார்.. காதலை வெளிப்படுத்தியதுடன், மாணவியின் விருப்பத்தையும் பணிந்து பெற்றுள்ளார்.. மாணவியுடன் எல்லை மீறி இருக்கிறார்.. நெருக்கமாகவும் இருந்துள்ளார்..
திடீரென, அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு, தலைமறைவாகிவிட்டார். அந்த மாணவி வீட்டை விட்டு ஓடிப்போகும்போது, 30,000 ரூபாய் மற்றும் நகைகளை தன்னுடைய வீட்டில் இருந்து எடுத்து சென்றிருக்கிறார்.
இதையடுத்து பெற்றோரும், உறவினர்களும் அவரை தேடி அலைந்திருக்கிறார்கள். எங்கேயுமே மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை ஹிந்தி டீச்சர், மாணவியின் பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் அனுப்பி வைத்தார்..
இந்த வீடியோவை பார்த்ததுமே, உச்சக்கட்ட அவமானமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அவமானம் தாங்காமல், வீட்டை விட்டே அவர்கள் வெளியே வரவில்லை.
இந்த வீடியோ குறித்த தகவல் போலீசாருக்கு போனதையடுத்து, வழக்குப்பதிவு செய்து மாணவியை தேட துவங்கினர். ஆனால் 3 மாதமாகியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கோண்டா போலீஸார் கூறும்போது, இந்தி டீச்சர், தன்னுடைய இடத்தை உடனுக்குடன் மாற்றிக் கொண்டே இருக்கிறார், அதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அவரை விரைவில் பிடித்துவிடுவோம், மாணவியை மீட்டுவிடுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.