ஜெய்ஷா என்ன கிரிக்கெட் வீரரா? இல்ல கிரிக்கேட் கோச்சரா? அமித்ஷா பேச்சுக்கு முதலமைச்சரின் மகன் பதிலடி!!
Author: Udayachandran RadhaKrishnan11 October 2023, 4:47 pm
ஜெய்ஷா என்ன கிரிக்கெட் வீரரா? இல்ல கிரிக்கேட் கோச்சரா? அமித்ஷா பேச்சுக்கு முதலமைச்சரின் மகன் பதிலடி!!
மத்திய உள்துறை அமைச்சர் தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவின் ஒரே ஒரு கனவு, மகன் கேடி ராமாராவை முதல்வராக்குவது என்பதுதான்.
தெலுங்கானவில் சந்திரசேகர ராவ் ஆட்சிதான் தொடர வேண்டுமா? அல்லது மத்தியில் மாநிலத்தில் ஒரே கட்சியின் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு அமைய வேண்டுமா? என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும்.
பழங்குடியினர் நலனுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர் பிரதமர் மோடிதான் என்றார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு, கேடி ராமாராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறும்போது, வாரிசு அரசியல் பற்றி அமித்ஷா பேசுவதுதான் வேடிக்கையானது. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.

இந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் ஜெய்ஷா என்ன கிரிக்கெட் வீரரா? கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவரா? அல்லது கிரிக்கெட் வீரர்களுக்கு கோச்சிங் நடத்தியவரா? பிறகு எப்படி இந்த பதவிக்கு ஜெய்ஷாவால் வர முடிந்தது என்பதை அமித்ஷா விளக்குவாரா?
மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு முன்பாக, 10 ஆண்டுகளில் பாஜக தெலுங்கானா மக்களுக்கு செய்தது இவை என பட்டியல் போட்டு பிரசாரம் செய்ய முடியுமா?
தேர்தல் காலங்களில் பாஜக தலைவர்கள் அள்ளிவிடுகிற வெற்று வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்து போய் சோர்வடைந்துவிட்டனர் மக்கள். மத்தியில் பாஜக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் தெலுங்கானா மாநில அரசை பார்த்து காப்பியடித்ததுதான். இவ்வாறு கேடி ராமாராவ் கூறினார்.