சென்னை அருகே அதிகாலை நடந்த என்கவுன்டர்… 2 ரவுடிகளை ஓட ஓட சுட்டுக் கொலை செய்த போலீசார்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 8:47 am

சென்னை அருகே அதிகாலை நடந்த என்கவுன்டர்… 2 ரவுடிகளை ஓட ஓட சுட்டுக் கொலை செய்த போலீசார்..!!!

திருவள்ளூர் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி தலைவர் பார்த்திபன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர்.

தொடர்ந்து முத்து சரவணன் தலைமறைவாக இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து முத்து சரவணனை பிக்க போலீசார் சென்றுள்ளனர். அப்போது ரவுடி முத்து சரவணனுடன் மற்றொரு ரவுடியான சண்டே சதீஷ் என்பவரும் இருந்துள்ளார்.

இதில் போலீசார் சுற்றி வளைத்த உடன் அங்கிருந்து தப்பிக்க காவல்துறையினரை நோக்கி முத்து சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரையும் பிடிக்க முயன்ற போது தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து காலில் அடிப்பட்ட சண்டே சதீஷ் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஆனால் முத்து சரவணன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தில் மூன்று போலீசார் காயமடைந்தனர். ரவுடிகள பிடிக்க முயன்றபோது தாக்குதல் நடத்தியதால் காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…