ஹெச்.ராஜாவுக்கு என்னாச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி : பரபரப்பில் பாஜக!!!
Author: Udayachandran RadhaKrishnan12 October 2023, 10:38 am
ஹெச் ராஜாவுக்கு என்னாச்சு? திடீர் உடல்நலக்குறைவு : அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!!!
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முக்கிய தலைவர்களில் ஒருவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவடது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
தனது உடல்நலம் பாதிப்பு குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஹெச். ராஜாவின் அட்மின் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.