பிரபல தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீசார் அலர்ட் : பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2023, 3:44 pm

பிரபல தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீசார் அலர்ட் : பரபரப்பு!!!

விழுப்புரம் நகர மையத்தில் எம் எல் எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு பேசிய மர்ம நபர் ஒருவர் உங்கள் வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதை அடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து தற்போது விழுப்புரம் போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து தீவிரமாக சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களை போலீசார் வந்து தற்போது வெளியேற்றி வருகின்றனர். மேலும் இந்த வணிகவாளாகத்தில் மூன்று திரையரங்குகள், துணிக்கடை மளிகை கடை ஆகியவை இயங்கி வருகின்றன.

  • Dhruv Vikram Love Success actress is becoming Vikram's daughter-in-law வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!