ஆச்சரியப்பட்டுப்போன சமந்தா.. நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh13 October 2023, 11:30 am
கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா இவர்கள் இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்கள். கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இப்படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இகாத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கவில்லை. விரைவில் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், நடிகை நயன்தாரா சினிமா, குடும்பம் என பிசியாக இருந்தாலும் கூட பிசினஸில் தற்போது பட்டையை கிளப்பி வருவது அனைவரும் அறிந்த விஷயம்.
சமீபத்தில் கூட 9 ஸ்கின் கேர் எனும் அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கினார். இதனுடைய லாஞ்ச் நிகழ்ச்சி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், தன்னுடைய 9 ஸ்கின் கேரில் இருந்து நடிகை சமந்தாவிற்கு சப்ரைஸ் கொடுக்கும் வகையில் கிப்ட் அனுப்பியுள்ளார் நயன். இதை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் அன்பிற்கு நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.