அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன்… சட்டரீதியாக எதிர்கொள்வேன் ; திமுக எம்.பி. ஆ. ராசா ஆவேசம்!!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 2:10 pm

அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன்… சட்டரீதியாக எதிர்கொள்வேன் ; திமுக எம்.பி. ஆ. ராசா ஆவேசம்!!!

அமலாக்கத்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது :- 2023ல் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்துள்ளேன் என்கிறார் பிரதமர் மோடி. 53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது தமிழகம். தற்போது நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன். சட்டரீதியாக எதிர்கொள்வேன், அமலாக்கத்துறை சோதனை சாதாரணமாக நடப்பது தான், என்றார்.

நேற்று திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துக்களுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

  • Rachitha Fire movie glamour role சீரியலில் அம்மணி…சினிமாவில் திறந்தமேனி…’FIRE’ படத்தின் பாடலால் முகம் சுளித்த ரசிகர்கள்.!