திருமண கோலத்தில் பிரபாஸ் – அனுஷ்கா.. குழந்தையுடன் வைரலாகும் AI புகைப்படம்..!

Author: Vignesh
13 October 2023, 3:25 pm

நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகாவை சேர்ந்தவரான இவர் யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார்.

Anushka Kiss - Updatenews360

2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் -நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன் பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி தாராளமாக காட்டி நடித்த அனுஷ்கா அருந்ததி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு கவர்ச்சியை ஏறகட்டிவிட்டு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.

anushka prabhas - updatenews360

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார். அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள்.

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று மீடியாக்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து அனுஷ்கா மற்றும் பிரபாஸ் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.

anushka prabhas - updatenews360

இந்நிலையில், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு திருமணமானது போன்றும் குழந்தையுடன் இருப்பது போன்றும் AI தொழில்நுடத்தை பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்களை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

anushka prabhas - updatenews360
anushka prabhas - updatenews360
anushka prabhas - updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 573

    0

    0