பணத்துக்காக பண்ணல.. வாய்ப்புக்காக Adjust பண்ணேன்.. சிம்பு பட நடிகை ரிச்சா ஓப்பன் டாக்..!

Author: Vignesh
13 October 2023, 5:53 pm

2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலமாக கதாநாயகியாக நடிகை ரிச்சா கங்கோபத்யாய் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும், சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

richa-gangopadhyay

சினிமாவில் அறிமுகம் ஆகி.ய ஒரு சில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும், பிடித்த வேலையை செய்யப் போவதாக கூறி திருமணம் செய்து செட்டில் ஆகினார். நடிக்காமல் விலகிய காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ள அவர், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், தற்போது சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை தோன்றியிருக்கிறது.

richa-gangopadhyay

வாஷிங்டன் யுனிவர்சிட்டி எம் பி ஏ படித்து முடித்து இருக்கிறேன். தொழிலில் சாதிக்க வேண்டும் என்று பல ஆசை இருந்தது. சினிமாவில் நடித்த உடனே சம்பாதித்து விடலாம் ஆனால், எனக்கு போதுமான பணம் இருப்பதால் பணத்திற்காக சினிமாவில் ஓடுவது எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

richa-gangopadhyay

மேலும், அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய கேள்விக்கு முதலில் இந்த கேள்வியை பெண்ணிடம் கேட்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். நீங்கள் கேட்கிறீர்கள் என்னை பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைக்கவில்லை என்றும், கவர்ச்சியான காட்சியில் நடிக்க வேண்டும் என்றே கேட்டார்கள். பட வாய்ப்பு மற்றும் ரசிகர்களுக்காகத்தான் கவர்ச்சியாக நடிப்பதாகவும் ரிச்சா கூறி இருக்கிறார்.

richa-gangopadhyay

கவர்ச்சியாக ஆடை அணிந்து வர சொல்வார்கள். இந்த காட்சிக்கு இது தேவையா என்று நான் கேட்க வேறு ஆடை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் என்றும், தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தான் சில சங்கடங்களை எதிர்கொண்டதாகவும், படுக்கைக்கு யாரும் இதுவரை அழைத்ததில்லை என்றும், யாரிடமும் நெருக்கமாக பழக மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

  • Popular Unmarried Actress Pregnant Photos Goes Viral திருமணம் ஆகாமலேயே விஜய் பட நடிகை கர்ப்பம்… வைலராகும் போட்டோஸ்!!