லியோ சிறப்பு காட்சி விவகாரம்.. மீண்டும் தமிழக அரசு போட்ட திடீர் உத்தரவு ; உச்சகட்ட அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்…!!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 6:20 pm

லியோ சிறப்பு காட்சி விவகாரம்.. தமிழக அரசு போட்ட திடீர் உத்தரவு ; உச்சகட்ட அதிருப்தியில் விஜய் ரசிகர்கள்…!!!

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

leo-updatenews360

இப்படியிருக்கையில், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசுக்கு படக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை நிராகரித்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு மட்டும் 5 காட்சிகளை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், மற்றுமொரு அறிக்கை தமிழக அரசின் சார்பில் வெளியாகியுள்ளது. அதாவது, லியோ திரைப்படத்தை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரையில் 5 காட்சிகளாக திரையிட வேண்டும் என்று நேரக் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த உத்தரவு மீண்டும் விஜய் ரசிகர்களிடையே உச்சகட்ட அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. சாதாரணமாகவே ஒரு நாளில் 5 காட்சிகளை திரையிட முடியும் என்ற சூழலில், இதில் சிறப்பு காட்சிகள் எங்கே..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 476

    0

    0