கல்வாரி மலையா ஏசுமலையா? விண்ணை பிளந்த சென்னிமலை முழக்கம் : ஒன்றுதிரண்ட முருக பக்தர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2023, 5:49 pm
கல்வாரி மலையா ஏசுமலையா? விண்ணை பிளந்த சென்னிமலை முழக்கம் : ஒன்றுதிரண்ட முருக பக்தர்கள்!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ளது புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில். இங்குதான் கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது.
இந்த நிலையில் சென்னிமலையில் அண்மையில் கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பினர் நிகழ்ச்சி ஒன்றில் சென்னிமலையின் பெயரை கல்வாரி மலை அல்லது ஏசுமலை என மாற்ற வேண்டும் என பேசியதாக இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன.
இதற்கு சென்னிமலை முருக பக்தர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், சென்னிமலை ஆண்டவர் குழு பொதுமக்கள் என்ற பெயரில் “சென்னிமலையை காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னிமலையில் நேற்று மாலை இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சென்னிமலையில் சமுத்திரமாக திரண்ட காவி சொந்தங்கள் 👌👌👏👏🙏🙏
— ArunmozhiVarman 🕉🚩🇮🇳🛕🎻 (@Arunmozhi_Raaja) October 13, 2023
ஏன்டா பல ஊரு காசுல வயித்த கழுவுற பாவாடை, உங்களுக்கே இவ்வளவு அதுப்புன்னா,
சுயமா உழைச்சு, ஏர் பிடிக்கிற கைக்கு எவ்வளவு திமிர் இருக்கும்டா
🔥🔥🔥#சென்னிமலையைக்_காப்போம் #சென்னிமலை #சென்னிமலையை_காப்போம் pic.twitter.com/OiSWfezVfz
சென்னிமலை பாதுகாப்புக்கான இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். மேலும் காவி கொடிகளுடன் பெரும் எண்ணிக்கையில் முருக பக்தர்கள் திரண்டு, சென்னிமலையை பாதுகாப்போம் என முழக்கங்களை எழுப்பினர்.
இந்த சென்னிமலை பாதுகாப்பு விவகாரம் சமூக வலைதளங்களிலும் இடம்பிடித்திருக்கிறது. #சென்னிமலையை_காப்போம் என்ற ஹேஷ்டேக்குடன் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை பதிவுகளை வெளியிட்டும் வருகின்றனர்.
பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தமது எக்ஸ் பக்க பதிவில், ” சென்னிமலை எங்கள் மலை எங்கள் முருகன்.. எங்கள் அடையாளம் என எழுதியுள்ளார். தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார், சென்னிமலையை கல்வாரி மலை, ஏசுமலை என பெயர்மாற்றம் செய்ய முயற்சி எடுக்கும் கிறிஸ்துவ முன்னனியை கண்டித்தும் அதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் சனாதன (இந்து மத) ஒழிப்பு திராவிட மாடல் ஆட்சியை கண்டித்தும் மாபெரும் ஆர்பாட்டம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என குறிப்பிட்டுள்ளார்.
Bagavath Pratheep என்பவர், கொங்கு நாட்டில் ஆரம்பமானது இந்து எழுச்சி என்ற தலைப்பிட்டு சென்னிமலை போராட்டங்களை பதிவிட்டுள்ளார். இப்பதிவில் ஏராளமானோர் தொடர்ந்து பதிவிட்டும் வருகின்றனர்.