மூதாட்டியிடம் உறவினர் என நடித்து 8 சவரன் நகையை அபேஸ் செய்த பெண் : நூதன மோசடி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 October 2023, 1:57 pm
மூதாட்டியிடம் உறவினர் என நடித்து 8 சவரன் நகையை அபேஸ் செய்த பெண் : நூதன மோசடி சம்பவம்!!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பெரிய வீதியில் வசிப்பவர் சுந்தர்ராஜ் மனைவி நீலாம்பாள்(86).
சுந்தர்ராஜ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்த நிலையில் மூதாட்டி மட்டும் கணவர் வாழ்ந்த வீட்டில் அவர் நினைவாக தனியாக வசித்து வருகிறார்.
இவர் வீட்டிற்கு எதிர்ப்புறம் இவரது மகன் தமிழரசன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் வீட்டில் தனியாக இருந்த நீலாம்பாளிடம் காரில் வந்த மர்ம பெண் தன் தந்தை ஒரு ஆசிரியர் என்றும் முசிறி பகுதியில் வசித்ததாக கூறிவிட்டு தங்கள் கணவர் இறந்ததை கேள்வி பட்டு தங்களை பார்க்க வந்தோம் என்று கூறி சுந்தராஜ் படத்திற்கு மாலை அணிவித்து உள்ளார்.
நீலாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 2 சவரன் வளையல்களை கழட்டிக் கொடுக்குமாறும் அதை தான் உங்கள் கணவர் படத்தில் வைத்து சாமி கும்பிட வேண்டும் என்று மர்மபெண் கூறியதால் மூதாட்டி எதார்த்தமாக நகைகளை கழட்டி கொடுத்துள்ளார்.
பின்பு பேசிக் கொண்டு இருக்கும் பொழுது மர்ம பெண் நைசாக மர்மப் பெண் அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளார். அவர் சென்ற பின்பு தான் மூதாட்டிக்கு நகையின் பற்றிய நினைவு வந்தது இதனைத் தொடர்ந்து அவர் தன் ஏமாற்றப்பட்டதை தனது எதிர் வீட்டில் உள்ள மகனிடம் கூறியுள்ளார்
இது குறித்து அவரது மகன் தமிழரசன் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பகலில் மூதாட்டியை நூதன முறையில் மர்மபெண் ஏமாற்றிய இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது