சென்னை வாசிகளே கவனம்… ஓலா, ஊபர் ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2023, 9:13 am

சென்னை வாசிகளே கவனம்… ஓலா, ஊபர் ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு!!!

ஓலா, ஊபர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, நாடு முழுவதும் கால் டாக்சிகளை பல ஆயிரக்கணக்கானோர் இயக்கி வருகின்றனர்.

இவர்களுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் ஓட்டுநர்களும் கார் உரிமையாளர்களும் புகார்களை தெரிவிக்கின்றனர்.

மேலும், பைக் டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கால் டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் வேலைக்கு செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

  • Upendra UI Movie First Card தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!
  • Views: - 459

    0

    0