வேண்டாம்.. வேண்டாம்னு சொல்லியும் விடல.. ராஜ்கிரனால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை..!

Author: Vignesh
16 October 2023, 12:14 pm

ஒரு சில மலையாள படங்களில் நடிகை சங்கீதா குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் என் ரத்தத்தின் ரத்தமே, இதய வாசல் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் நாயகியாக நடித்த முதல் திரைப்படம் ராஜ்கிரண் நடித்த எல்லாமே என் ராசாதான் என்ற படம் தான். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு சங்கீதாவுக்கு பூவே உனக்காக படத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. சங்கீதாவிற்கு இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது.

sangeetha -updatenews360

இந்நிலையில், எல்லாமே என் ராசா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதாவது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தில் நடித்ததாகவும், அந்த படத்தில் இருந்தவர்கள் எல்லோரும் கரடு முரடான தோற்றத்தில் இருப்பவர்களாக இருந்ததாகவும், ராஜ்குமார் சார் தான் தனக்கு ஜோடி.

rajkiran-updatenews360

அந்த படத்தில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் என்பதற்காக தான் கொஞ்சம் வெயிட் போட்ட பிறகு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்றார்கள். அதனால் தினமும் ராஜ்கிரன் சார் அவர்களின் ஆஃபீஸிலிருந்து வாழைப்பழம், சாப்பாடு, ஐஸ்கிரீம், தயிர் என விதவிதமாக வரும் ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், சாப்பாட்டை கொஞ்சமாக தான் சாப்பிட முடியும். ஆனால், அவர்கள் கண்டிப்பாக அதிகமாக சாப்பிடணும்னு கட்டாயப்படுத்தினார். இதனால் சாப்பிட நான் மிகவும் கஷ்டப்பட்டு அழுது கொண்டே சாப்பிட்டேன் என தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 368

    0

    0