என்ன சீதா இதெல்லாம்…? திருமணம் ஆன நடிகருக்கு லிப்லாக் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மிருணாள் தாகூர்!

Author: Shree
16 October 2023, 1:39 pm

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வளம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் சூப்பர் 30 , பாட்லா ஹவுஸ் படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கில் 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அந்த ஒரு படத்திலே சூப்பர் ஹிட் ஹீரோயினாக முத்திரை பதித்து சம்பளத்தை உயர்த்தினார்.

அதையடுத்து இந்தியில் சர்ச்சை கிளம்பியுள்ள தி லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பாலியல் உறவு தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் நானியுடன் “Hi நான்னா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தந்தை, மகள் இடையிலான பாசத்தை மையப்படுத்தி உருவாக்கியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலாகி உள்ளது. இதில் நானியுடன் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளதை பார்த்த மிருணாள் தாகூர் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதோ அந்த வீடியோ:

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!