இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?
Author: Babu Lakshmanan17 October 2023, 12:08 pm
இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,515 ஆகவும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 18 கேரட் ஆபரன தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4518 ஆகவும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,144க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.77க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.