“லியோ” 19ஆம் தேதி ரிலீஸ் ஆகாது… திடீரென தடை விதித்த கோர்ட்… காரணம் என்ன?
Author: Shree17 October 2023, 3:42 pm
விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படம் வெளியாக வெகு சில நாட்களே உள்ள நிலையில் அந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் வில்லனை கெட்ட வார்த்தையில் திட்டியிருப்பார். அது பீப் போடாமல் அப்படியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இப்படி சர்ச்சையில் சிக்கி வருவதால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்தனர். பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது கண்டிப்பாக அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் ரசிகர்களுக்காக படம் திரையிடப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், சென்னையில் திரையரங்குக்கு வெளியே ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து விழுந்து இறந்ததை அடுத்து, ஜனவரி 2023 முதல் தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு, தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள்/ அதிகாலைக் காட்சிகள் நடத்த திரையரங்குகளுக்கு அரசு அனுமதிக்கவில்லை.
இதனால் விஜய்யின் ‘லியோ’ படத்தையும் தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ் செய்ய முடியாது அறிவித்தனர். ஆனால் சிறப்பு காட்சிகளாக ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, விஜய்யின் லியோ திரைப்படத்தை ” லியோ” என்கிற டைட்டிலோடு அப்படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி சித்தாரா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதையடுத்து ஆந்திராவில் லியோ திரைப்படம் வருகிற 20ம் தேதி வரை ரிலீஸ் ஆகாது என ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து லியோ படக்குழுவினர் சித்தாரா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பிரச்சனையை பேசி முடித்து அக்டோபர் 19ஆம் தேதி அன்றே வெளியிட விநியோகஸ்தர் சித்தாரா என்டர்டைன்மெண்ட் மற்றும் தயாரிப்பாளர் லலித் முயற்சி எடுப்பார்கள் என கூறப்படுகிறது.