தமிழா தமிழாவிலிருந்து இதனால் தான் விலகினேன் – முதல்முறை ரகசியங்களை உடைத்த கரு.பழனியப்பன்..!

Author: Vignesh
18 October 2023, 2:30 pm

பிரபல தனியார் தொலைக்காட்சிகளான விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் கடந்த சில நாட்களாகவே TRP யில் போட்டிப்போட்டுக்கொண்டு யார் பெருசு என முந்தியடித்தனர். அதில் வழக்கம் போலவே விஜய் டிவியை யாராலும் அசைக்க முடியவில்லை.

karu palaniappan

அப்படித்தான் நீயா நானா நிகழ்ச்சிக்கு போட்டியாக கரு. பழனியப்பன் ஜீ தமிழில் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சி மக்களால் பார்க்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் அவரது கருத்துக்களை மக்கள் விரும்பினாலும் காலப்போக்கில் அது கசப்பாகி அந்த மனுஷன் மீது வெறுப்பையும், கிண்டலையும் கக்கி வந்தனர்.

ஆம், கோபிநாத்துடன் இணைத்து கருபழனிப்பனின் பேச்சை கிண்டலடித்தனர் நெட்டிசன்ஸ். மேலும் அவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அரசியல் பேசி வருவதாகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். அதற்கு முடிவு கட்டிய கரு. பழனியப்பன் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறிவிட்டார். தற்போது, ஆவுடையப்பன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

karu palaniappan

இதனிடையே, தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து தான் வெளியேறியதற்கான காரணத்தை கரு.பழனியப்பன் தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது, சேனல் தரப்பினருக்கும் ஓரிடத்தில் முரண்பாடு ஏற்பட்டதாகவும், ஒன்று தான் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். இல்லை என்றால் அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும். ஆனால், ஒருவரே எப்போதும் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது. அந்த இடத்தில், அங்கே சமமான நிலை ஏற்படவில்லை. அதனால் தான் விலகினேன் என்று கரு.பழனியப்பன் தெரிவித்திருக்கிறார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?