தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்? காங்கிரஸ் பிளான் தவிடுபொடி… வெளியானது மெகா சர்வே!!
Author: Udayachandran RadhaKrishnan18 October 2023, 6:56 pm
தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பது யார்? காங்கிரஸ் பிளான் தவிடுபொடி… வெளியானது மெகா சர்வே!!
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தெலுங்கானா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தெலுங்கானா சட்டசபையில் தற்போது ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு 99; காங்கிரஸ் கட்சிக்கு 7; பாஜகவுக்கு 3 ; ஓவைசி மஜ்லிஸ் கட்சிக்கு 7 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தெலுங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் இதுவரை முரண்பாடாக வந்துள்ளன.
தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சி அமைக்கும்ல் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை காங்கிரஸிடம் பறி கொடுக்கும்; தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என 3 விதமான கருத்து கணிப்பு முடிவுகள் இதுவரை வெளியாகி இருக்கின்றன.
தற்போது Democracy Times Network, தெலுங்கானாவின் 119 தொகுதிகளின் கள நிலவரத்தையும் ஆராய்ந்து கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் எந்த கட்சிக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கும்? என்பதையும் விவரமாக இந்த கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் ஒட்டுமொத்தமாக தெலுங்கானாவில் மீண்டும் பிஆர்எஸ் கட்சி அமைக்கக் கூடும் என்கிறது இக்கருத்து கணிப்பு. ஆளுநம் பிஆர் எஸ் கட்சிக்கு 67 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களும், பாஜகவுக்கு 6 இடங்களும், ஓவைசியன் மஜ்லிஸ் கட்சி 6 இடங்களும் வெல்ல வாய்ப்புண்டு என கருத்துகணிப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.