மதுபோதையில் தகராறு… வாலிபரின் கை, கால்களை வெட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள் ; மீஞ்சூரில் கொடூர சம்பவம்..!!!

Author: Babu Lakshmanan
19 October 2023, 9:35 am

திருவள்ளூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீஞ்சூர் ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜித் (25) என்பவரை கத்தியால் வெட்டி கொலை செய்து கை, கால்களை கட்டி முட்புதர் அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.

அவரது தந்தை பச்சையப்பன் என்பவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நாகராஜ் கார்த்திக் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இருவர் அளித்த தகவலின் பேரில் கிணற்றில் இருந்து அஜித் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலையில் தொடர்புடைய மோகன், சாய், கணேஷ் சந்தேகத்துக்கிடமான வசந்தகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மூன்று நாட்களாக கொலை செய்யப்பட்டு சடலம் கிணற்றில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிணற்றிலிருந்து இளைஞரின் உடல் எடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 335

    0

    0