அடப்பாவிகளா சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களே.. பிக் பாஸ் போட்டியாளர்கள் செய்த அசம்பாவிதம்..!
Author: Vignesh19 October 2023, 12:20 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, முதல் நாளில் இருந்தே பிக் பாஸில் நிறைய டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனன்யா ராவ், பவா செல்லத்துரை என இரண்டுபேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இதனிடையே, இன்று வந்துள்ள பிரமோவில், கார்டன் பகுதியில் ஒரு பெட்டிக்குள் சிலிண்டர்களை வைத்துள்ளனர். அதிகம் சிலிண்டர் எந்த வீட்டர் கலெக்ட் செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்று பிக் பாஸ் அறிவித்தார். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு சிலிண்டர்களை எடுத்தனர். அப்போது, அங்கிருக்கும் கண்ணாடியை கவனிக்காத சில போட்டியாளர்கள் உடைத்து தள்ளிவிட்டு உள்ளே நுழைகின்றனர். இதனால், பிக் பாஸ் டாஸ்கை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.