தண்ணீர் லாரி மீது மோதிய தனியார் பேருந்து… கோவையில் நடந்த பயங்கர விபத்து : காத்திருந்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2023, 2:08 pm

தண்ணீர் லாரி மீது மோதிய தனியார் பேருந்து… கோவையில் நடந்த பயங்கர விபத்து : காத்திருந்த ட்விஸ்ட்!!

கோவை பிரஸ்காலனி பகுதியில் இருந்து 32E எண் கொண்ட தனியார் பேருந்து ஒன்று கோவையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. துடியலூரை தாண்டி வெள்ளகிணர்பிரிவு அருகே வரும்போது முன்னாள் சென்று கொண்டிருந்த தண்ணிர் லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

நிலை தடுமாறிய தண்ணீர் லாரி ஓட்டுநர் சுமார் 50 அடி தூரத்திற்கு முன்னால் சென்று நிறுத்தினார். அதேவேகத்தில் பேருந்தும் சென்று நின்றது. அப்போது அருகில் வந்த டூவிலருக்கு அடிவிழுந்தது.

டூவிலர் ஓட்டியவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதேபோல பேருந்தில் முன்னால் உட்கார்ந்து பயணம் செய்த பயணிகள், பேருந்து ஓட்டுநர் ஆகியோர் சிறிய காயத்துடன் தப்பினர்.

லாரி ஓட்டுநருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகர போக்குவரத்து துறை போலீசார் தண்ணீர் லாரியை அப்புறப்படுத்தினர்.

பேருந்தையும் அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஏதுவும் நடக்கவில்லை என்பதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

  • Jailer 2 Movie Update கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!