அரசு பேருந்தை மறித்து விஜய் ரசிகர்கள் அலப்பறை.. ஓட்டுநர் மீது தாக்குதல்.. ‘லியோ’ காண வந்த ரசிகர்கள் ‘ஐயோ’ அம்மா என ஓட்டம்!!
Author: Udayachandran RadhaKrishnan19 October 2023, 6:48 pm
அரசு பேருந்தை மறித்து விஜய் ரசிகர்கள் அலப்பறை.. கடுப்பான ஓட்டுநரை தட்டித் தூக்கிய ரசிகர்களால் அதிர்ச்சி!!
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா திரையரங்கு முன்பு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியானது.
படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் காலை 7 மணி முதல் வாசல் முன்பு காத்திருந்தனர். அப்போது ஒரு சில விஜய் ரசிகர்கள் சாலையில் வந்த பேருந்துதை மறித்து நடனமாட தொடங்கினர்.
ஒரு சில பேருந்து ஒட்டுனர்கள் சகித்து கொண்டு அவர்களை கடந்து சென்றார். அப்போது அதே பகுதியில் அரசு பேருந்து சாலையில் வந்து கொண்டிருந்தது போது அரசு பேருந்தை குறுக்கே சென்று இளைஞர்கள் மறித்து நடனமாட தொடங்கினர்.
அரசு பேருந்து ஒட்டுனர் பேருந்தை நிறுத்தி ஏன் இப்படி இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்டபோது ஆவேசம் அடைந்த இளைஞர்கள் ஒட்டுனரை தாக்கியாதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது