ஜெயிலுக்கு போகும்போது கேட்டா அந்த ஒரு கேள்வி.. மகாலட்சுமி கணவர் ரவீந்தர் சொன்ன சீக்ரெட்ஸ்..!

Author: Vignesh
20 October 2023, 11:15 am

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது. இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

mahalakshmi-and-ravindar-chandrashekharan cover

அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விமர்சித்ததன் மூலம் மக்களிடையே பேமஸ் ஆனார். அது மட்டுமல்லாமல் நடிகை வனிதாவின் மூன்றாம் திருமணத்தை வச்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. ஆம், தயாரிப்பாளர் ரவீந்திரன் சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு கைது செய்தனர்.

ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும் அந்த மோசமான அனுபவத்தை குறித்தும், மனைவி மகாலக்ஷ்மி கொடுத்த தைரியத்தை பற்றியும் பேட்டியளித்த ரவீந்தர்… மகாலட்சுமிக்கு ரொம்ப திமிரு… ஆமாங்க, நான் ஜெயிலுக்கு போனதும் எங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வரலாம். அல்லது மகாலக்ஷ்மியை பலர் மோசமாக விமர்சிப்பார்கள் என்றெல்லாம் நினைத்திருந்தேன். அனால், அவள் ஜெயிலில் வந்து என்னை பார்த்தபோது ” உன்னை ஒவ்வொரு நாளும் மிஸ் பண்றேன் அம்மு… இன்னும் எத்தனை நாளோ நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு” என கூறினார். அவள் என் மீது அவ்வளவு காதலை வைத்திருக்கிறாள்.

என்னை விட என்மீது அதிக நம்பிக்கை வைத்தவள் மகாலக்ஷ்மி. நான் சீக்கிரம் ஜெயிலில் இருந்து வெளியே வந்திடுவேன் என அவள் என்னை ரொம்ப நம்பினால். அத்துடன் நான் முதல் நாள் புழல் சிறையில் போய் நின்ற போதே அங்கு இருந்த கதவை பார்த்து பயந்துவிட்டேன். அங்கு பாத்ரூம் கூட போக முடியல. மனவேதனையாக இருந்தது. ஒருகட்டத்தில் செத்துடலாம்னு இருந்துச்சு என்று ரவீந்தர் உருக்கமாக பேசியுள்ளார்.

நான் விரைவில் சிறையில் இருந்து வந்துவிடுவேன் என்று என்னை விட அவர் உறுதியாக இருந்தாள். எனக்காக அவள் நின்றாள். சிறைக்கு அழைத்துச்செல்லும் போது என் ம்னைவி மகாலட்சுமி என்னிடம், எப்படி உட்காருவாய்? எப்படி எந்திரிப்பாய்? என்று கேட்டாள். அந்த நேரத்தை என்னால் மறக்கவே முடியாது என்றும் என் தாய்க்கு பின் மகாலட்சுமி தான் என் உடல் மீது அதீத அக்கறை கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி