வார இறுதியில் சரிவுடன் பங்குச்சந்தைகள் வர்த்தகம் : கலக்கத்தில் முதலீட்டாளர்கள்..!

Author: Babu Lakshmanan
20 October 2023, 2:28 pm

வார இறுதியில் சரிவுடன் பங்குச்சந்தைகள் வர்த்தகம் : கலக்கத்தில் முதலீட்டாளர்கள்..!

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 192 புள்ளிகள் சரிவடைந்து 66,436 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 76 புள்ளிகள் சரிந்து 19,548 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

Kotak Mahindra, Nestle, IndusInd Bank, TCS, SBI Life Insura போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. ITC, Divis Labs, HUL, BPCL, Tata Steel போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.70 புள்ளிகள் சரிந்து 80.20 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 50.14 புள்ளிகளுடனும், ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.30 புள்ளிகள் சரிந்து 19.90 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 11.93 புள்ளிகளுடன் வர்த்தமாகி வருகிறது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…