உலகிலேயே இது தான் ரொம்ப அழகு… அப்பா கொடுத்த Gift – ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி பேட்டி!

Author: Shree
20 October 2023, 5:26 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

shruti hassan-updatenews360

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருவதோடு எப்போதும் சமூகவலைத்தளங்களில் செம ஆக்டீவாக இருந்து வருகிறார்.

shruti hassan

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் வரமகாலக்ஷ்மி பிராண்ட் பட்டு சேலை விளம்பரத்திற்கு நடித்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலகிலேயே இது தான் ரொம்ப அழகு சேலை கட்டியபின் தெரியும் அந்த structure அழகு தான். நான் மிகவும் விரும்பி பட்டு சேலை அணிந்தால் எனக்கு பாசிட்டிவ் பீல் வரும் என்றார். நீங்க எத்தனை சேலை வச்சிருக்கீங்க? என கேட்டதற்கு, அவ்வளவா இல்லை எனக்கு அப்பா தான் பட்டு சேலை gift பண்ணுவாரு… அதிலே எனக்கு கருப்பு கலர் பட்டு சேலை, டார்க் ப்ளூ கலர் பட்டு சேலை என்றால் மிகவும் பிடிக்கும் என்றார்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 493

    9

    3